இந்தியாவில் முதல்முறையாக எல்லா வங்கிகளுக்கும் முன்னோடியாக குரல்வழி வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது சிட்டி யூனியன் வங்கி.
தி கும்பகோணம் பேங்க் என்று 1904 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கி பின்னர் சிட்டி யூனியன் வங்கி என பெயர் மாற்றம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் சுமார் 650 கிளைகளுடன் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது.
சிட்டி யூனியன் வங்கியின் 116 வது நிறுவன தின விழாவில் சியூபி ஆல் இல் ஒன் என்ற புதிய செல்போன் ஆப் (செயலி) அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த செயலில் புதியதாக குரல்வழி வங்கி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.
சிட்டி யூனியன் வங்கி இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக சிட்டி யூனியன் வங்கிதான் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குரல்வழி வங்கி சேவையை பயன்படுத்த செயலின் கீழ் பகுதியில் உள்ள ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் இந்த சேவை வழங்கப்படுகிறது.
நமக்கான மொழியை தேர்வு செய்து குரல்வழியில் வங்கி சேவையை பெறலாம்.
பணம் அனுப்புதல், வங்கி கணக்கில் இருக்கும் தொகை மற்றும் பண பரிமாற்றங்கள் உள்ளிட்ட சில தகவல்களை உடனடியாக பெற முடியும்.
Leave a Reply