தபால் நிலையங்கள் வழங்கும் தொடர்ச்சியான வைப்புத் திட்டத்திற்கு புதிய திருத்தங்களின் படி புதிய முதலீட்டாளர்கள் 5.8% வட்டியைப் பெரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி செயலி மூலம் ஆன்லைனில் தொடர்ச்சியான வைப்பு நிதி (RD) கணக்கிற்கு டெபாசிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நம் நாட்டில் தொடர்ச்சியான வைப்பு நிதி (RD) ஒரு பிரபலமான சேமிப்பு திட்டமாகும்.
5 ஆண்டுகள் தொடர்ச்சியான வைப்பு திட்டம் உள்ளிட்ட பல சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விகிதங்கள் 2020 ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் அறிவிக்கப்படும்.
வட்டி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்ட புதிய திருத்தங்கள் படி போஸ்ட் ஆபீஸ் தொடர்ச்சியான வைப்பு திட்டங்களின் புதிய முதலீட்டார்கள் 5.8% வட்டியை பெறுவார்கள்.
தொடர்ச்சியான வைப்பு நிதி (RD) கணக்கிற்கு ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளதால் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. இதன் மூலம் மாதாந்திர தவணை (RD) தொகையை இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி செயலி மூலம் எளிதாக கட்டிவிடலாம்.
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (ஐபிபிபி) செயலி மூலம் RD கணக்கில் பணத்தை எப்படி மாற்றுவது என பார்ப்போம்.
- முதலில் உங்கள் வங்கி கணக்கில் இருந்து இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (ஐபிபிபி) கணக்கிற்கு பணத்தை மாற்ற வேண்டும்.
- உங்கள் செயலியில் DOP-ல் தொடர்ச்சியான வைப்புத்தொகையை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
- பின்னர் உங்கள் RD கணக்கு எண்ணையும், வாடிக்கையாளர் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்
- தவணை காலம் மற்றும் தொகையைத் தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு ஐபிபிபி செயலியில் இருந்து உங்க வைப்பு கணக்கிற்கு பணத்தை செலுத்த வேண்டும்.
புதிய வாடிக்கையாளராக இருந்தால் அருகில் இருக்கும் தபால் நிலையத்திற்கு ஒரு முறை செல்ல வேண்டும். உங்கள் டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு திறக்கப்பட்டதும் ஆன்லைனில் அனைத்து பரிமாற்றங்களையும் எளிதாக மேற்கொள்ளலாம்.
பழைய வாடிக்கையாளர்களாக இருந்தால் பழைய வாடிக்கையாளர்களாக இருந்தால் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு எண் வாடிக்கையாளர் ஐடி (சிஐஎஃப்) உங்கள் பிறந்த தேதி மற்றும் உங்கள் தோலை பேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும்
உங்கள் தகவல்களை பதிவு செய்தவுடன் ஒரு முறை கடவுச்சொல் (OTP) எண் உங்கள் தொலைபேசி எண்ணிற்கு வரும். அதை பதிவு செய்து உங்கள் MPIN பதிவு செய்து கொள்ளலாம்.
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக 5 ஆண்டு போஸ்ட் ஆபீஸ் தொடர்ச்சியான வைப்பு நிதி (RD) கணக்கிற்கு விதிக்கப்படும் அபராத தொகை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply