ATM

எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி செல்போன் வேண்டுமாம்!

Spread the love

ஏடிஎம் தொடர்பான மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது ஏடிஎம்களில் ஒடிபி முறையில் பணம் எடுக்கும் முறையை அறிமுக படுத்தியுள்ளது.

ஜனவரி 1 2020 முதல் இது நடைமுறைக்கு வந்து உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு இதனை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வடிக்கையாளர்களுக்காக எஸ்பிஐ ஏடிஎம்களில் மட்டுமே இது செயல்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க செல்லும் போது கண்டிப்பாக உங்கள் செல்போனை எடுத்து செல்ல வேண்டும்.

வாடிக்கையாளர் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ரூ .10000 க்கு மேல் பணம் எடுக்கும் போது மட்டுமே இந்த ஒடிபி முறையில் எடுக்க இயலும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. எனவே 10000க்கு மேல் பணம் எடுக்க இரவு நேரங்களில் சென்றால் கண்டிப்பாக செல்போன் எடுத்து செல்ல வேண்டும்.

இரவு நேரங்களில் டெபிட் கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகளைத் தடுக்க இந்த முறை ஜனவரி 1 முதல் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்பிஐதெரிவித்துள்ளது.

இந்த புதிய முறை படி வாடிக்கையாளர் தாங்கள் எடுக்க வேண்டிய தொகையை உள்ளீடு செய்தவுடன் வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்க்கு ஒடிபி எண்ணிற்கு அனுப்பப்படும். ஒடிபி ஏடிஎம்-ல் எண்ணை உள்ளீடு செய்து பணத்தை எடுத்து கொள்ளலாம்.

ஒருமுறை மொபைல் எண்ணிற்க்கு  வரும்  ஒடிபிஐ  ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். அடுத்த முறை அந்த ஒடிபி செல்லாது.

எஸ்பிஐ அல்லாத வேறு வங்கி கிளை ஏடிஎம்களில் இந்த முறை செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது

  • ரூ.1000க்கு மேல் பணம் எடுக்க மட்டுமே ஒடிபி தேவை
  • இரவு 8மணி முதல் காலை 8மணி வரை மட்டுமே இந்த ஒடிபி முறை
  • ஜனவரி 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது
  • எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்
  • எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இதர வங்கி ஏடிஎம்களில் வழக்கம் போல பணம் எடுத்து கொள்ளலாம்
  • வேறு வங்கி வாடிக்கையாளர்களுக்கு இது பொருந்தாது
  • இரவு நேரங்களில் நடக்கும் டெபிட் கார்டு மோசடிகளை தடுக்கவே இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது