மார்ச் 31ம் தேதிக்குள் உங்கள் பான் கார்டுடன் ஆதார் நம்பரை இணைக்கவில்லையெனில் உங்களுக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் “செயல்படாதவை” என்று அறிவிக்கப்படும் வருமான வரித்துறை முன்பு அறிவித்து இருந்த நிலையில் தற்போது வருமான வரித்துறை சட்டம் 272பி பிரிவின் கீழ் இப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என கூறியுள்ளது.
நம் நாட்டில் அனைத்து வகையான ஆவணங்களையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு எட்டு முறைக்கும் மேல் நீட்டிக்கப்பட்டு தற்போது மார்ச் 31 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிடில் என்ன நடக்கும் என்பதே பலரின் கேள்வி?
வருமான வரித்துறை சட்டத்தின் படி நீங்கள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் முதலில் உங்கள் பான் கார்டு செயலிழப்பு செய்யப்படும் என்றும், ஆதார் எண்ணை இணைக்காத குற்றத்திற்காக 10000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என வருமான வரித்துறை கூறுகிறது.
மார்ச் 31-ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவிட்டால் உங்கள் கார்டு செயலிழந்து விடும் எனவே உங்களால் 50000-ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கவோ , உங்கள் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தவோ முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.அது மட்டும் இல்லாமல் நீங்கள் அபராதமாக 10000-ரூபாயும் செலுத்த வேண்டும்.
உங்கள் பான் கார்டை வெறும் அடையாள அட்டையாக மட்டுமே பயன்படுத்த முடியும் மாறாக வங்கிக்கணக்கு துவங்கவோ, வங்கி பரிவர்த்தனைகளையோ, வருமான வரி சம்பத்தப்பட்ட விஷயங்களையோ செய்ய முடியாது.
காலக்கெடுக்குள் நீங்கள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கவில்லை என்றால் உங்கள் கார்டு செயலிழந்து விடும் என்றாலும் பின்னர் உடனடியாக நீங்கள் ஆதார் எண்ணை இணைத்து விட்டால் உடனே உங்கள் கார்டு செயல்படும் என்பது கூடுதல் தகவல்.
ஆதாருடன் பான் கார்டு இணைக்க வருமான வரித்துறை இணையத்தளத்திலோ அல்லது எஸ்எம்எஸ்மூலமோ இணைத்து கொள்ளலாம்.
எனவே நீங்கள் உங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையெனில் உடனடியாக ஆதார் எண்ணை இணைத்து வருமான வரித்துறை நடவடிக்கையில் இருந்து தப்பித்து கொள்ளளவும் மற்றும் உங்கள் வங்கி பரிமாற்றங்களில் பாதிப்புக்கள் வராமல் தடுத்து கொள்ளவும்.