கொரோனா பரவல் காரணமாக வங்கிகளின் இணைப்பு தள்ளி வைக்கப்படும் என்று ஊகிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 1-ல் இணைப்பு உறுதியாகியுள்ளது.
10 பொது துறை வங்கிகளின் இணைப்பிற்கு பிறகு இனி இந்தியாவில் 12 பொதுத்துறை வங்கிகள்தான் இருக்கும்.
நமது நாட்டின் வங்கிகளை முறைப்படுத்தி வலுப்படுத்தும் ஒரு மெகா திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
10 பொது துறை வங்கிகளை நான்காக இணைக்கும் இத்திட்டம் சென்ற ஆண்டு ஆகஸ்ட்டில் அறிவிக்கப்பட்டு இவ்வாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக பொது வங்கித் துறையில் பெரிய ஒருங்கிணைப்பை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா வங்கியை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைத்ததால் நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக அவ்வங்கி உருவெடுத்துள்ளது.
ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளைகள் ஏப்ரல் 1 முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளாக செயல்படும்.
சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் வங்கி இந்தியாவின் நான்காவது பெரிய வங்கியா கனரா வங்கி மாறியுள்ளது.
சிண்டிகேட் வங்கி கிளைகள் அனைத்தும் இணைப்பிற்கு பிறகு ஏப்ரல் 1 முதல் கனரா வங்கி கிளைகளாக செயல்படும்.
மேலும் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திர வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகளும், அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளைகள் அனைத்தும் ஆந்திர வங்கி கிளைகளாகவும், அலகாபாத் வங்கி கிளைகள் அனைத்தும் இந்தியன் வங்கி கிளைகளாகவும் செயல்படும்.
ஒன்றிணைந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒன்றிணைக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களாக ஏப்ரல் 1- 2020 முதல் கருதப்படுவார்கள்.
இணைப்பிற்கு பிறகு இந்தியாவில் 12 பொதுத்துறை வங்கிகள் இருக்கும் எனவும் அதில் ஆறு வங்கிகள் இணைக்கப்பட்ட வங்கிகளாகவும், ஆறு வங்கிகள் தனி நிறுவனங்கள் எனவும் கூறப்படுகிறது.
எஸ்பிஐ, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கி ஆறு இணைக்கப்பட்ட வங்கிகள் வங்கிகள் ஆகும்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பாங்க் ஆப் இந்தியா, மத்திய வங்கி. ஆகிய வங்கிகள் தனி நிறுவனங்களாக தொடர்ந்து செயல்படும்.
10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பிற்கு மத்திய அமைச்சரவை இந்த மாத தொடக்கத்தில் அனுமதி அளித்த நிலையில் அவ்வங்கிகள் நான்கு பெரிய வங்கிகளாக ஒருங்கிணைந்துள்ளது.
இந்த இணைப்பு இந்தியா பொருளாதாரத்தில் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
Leave a Reply