தனியார் வங்கியான எஸ் பேங்க்கின் வாராக்கடன் அதிகரித்ததால் கடுமையான நிதிச்சிக்கலில் சிக்கி இருந்தது. தற்போது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் எஸ் பேங்க் நிர்வாகம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் அலுலரான பிரசாந்த் குமார் என்பவர் எஸ் பேங்க்கை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த பேங்க் கொண்டுவரப்பட்டுள்ளதால் மற்றுமொரு அதிர்ச்சியாக வாடிக்கையாளர்கள் ரூ.50000க்கு மேல் பணம் எடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர தேவைகளுக்காக ரூ.50000க்கு மேல் தேவைப்பட்டால் வங்கி மேலாளரை அணுகி அவரின் அனுமதியுடன் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் இதனால் யாரும் அச்சப்படத்தேவை இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடன் சுமையில் இருந்து இந்த வங்கியை மீட்டு எடுக்கவே ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் எஸ் பேங்க் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.