எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பழைய கிழிந்த அழுக்கான ரூபாய் நோட்டுக்களை இலவசமாக மாற்றி கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இதில் வேண்டுமென்றே கிழிக்கப்பட்ட நோட்டுகளையோ ஏதாவது அரசியல் கருத்துகள் எழுதப்பட்ட நோட்டுகளையோ மாற்ற முடியாது என எஸ்பிஐ கூறியுள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 20 நோட்டுகள் எண்ணிக்கையில் ரூபாய் 5000/- மொத்த மதிப்புடைய நோட்டுகளை இலவசமாக மாற்றி கொள்ளலாம் எனவும், கிழிந்த மற்றும் அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகள் அனுமதிக்கப்பட்ட 20 நோட்டுகளைவிட அதிகமாக இருந்தால் அதிகமாக இருக்கும் ஒவ்வொரு நோட்டுக்கும் ரூபாய் 2 மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சேர்த்து செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.
இதுவே அதிகமா இருக்கும் ஒவ்வொரு ரூபாய் 1000/- க்கு 5/மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்க பட்டுள்ளது.
ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் விதிகளை ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி எஸ்பிஐ கடைபிடிப்பதால் வேண்டுமென்றே கிழிக்கப்பட்ட நோட்டுகளையோ வெட்டப்பட்ட நோட்டுகளையோ மாற்றமுடியாது.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள கிழிந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள எஸ்பிஐ கூறியுள்ளது.
Leave a Reply