கொரோனா பரவல் காரணமாக 21 நாட்களுக்கு லாக் டவுன் போடப்பட்டுள்ளது.
அத்தியாவசியமான அலுவலங்கள் தவிர பிற அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது வங்கி சேவைகள் அத்தியாவசியமான சேவைகள் பட்டியலில் வருவதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கவில்லை.
இந்நிலையில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் வங்கி ஊழியர்கள் தங்கள் பணியை தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தங்களுக்கும் வைரஸ் பரவும் ஆபத்து இருக்கும் நேரத்தில் பணிக்கு வர கூறுவதால் வங்கி ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் வாங்கி நிர்வாகத்தை விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) நிர்வாகம் அனைத்து மண்டலப் பொது மேலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிர்வாகம் அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
ஏற்கனவே மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கொல்கத்தா வட்ட தலைமைப் பொது மேலாளர் ரஞ்சன் குமார் மிஸ்ரா கூறும் பொழுது வங்கிகளுக்கென்ன தனியாக சமூக ஊடககொள்கை உள்ளதாகவும் அதை மீறி ஊழியர்கள் கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
மீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு எனவும், ஆனால் வங்கி பெயருக்கோ, வங்கிக்கோ களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் தக்க நடவடிக்கை எடுக்க படும் என தெரிவித்துள்ளார்.
எஸ்பிஐ வங்கியின் மூத்த நிர்வாகி ஒருவர் ஒருவரும் இதே கருத்தை தெரிவித்துள்ளார் இக்கட்டான நேரத்தில் வங்கியின் செயல்பாட்டை பலரும் பாராட்டி வரும் நிலையில் ஒரு சில ஊழியர்கள் வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், வங்கியின் கொள்கைகள் குறித்தும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.
வங்கிக்கு விடுமுறை விடாமல் செயல்படுவதால் சிலர் அதிருப்தி காரணமாக இவ்வாறு செய்கிறார்கள் எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
அதேசமயம் அனைத்து இந்திய வங்கி யூனியன் கூட்டமைப்பின் மூத்த நிர்வாகி ஒருவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்தியக்குடிமகனான ஒவ்வொருவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்றும் எஸ்பிஐ வங்கியின் இந்த நடவடிக்கை ஊழியர்களின் கருத்து சுதந்திரத்தை நசுக்குவது போன்றதாகும் என தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு 19-ம் பிரிவு வழங்கியுள்ள உரிமையை யாரும் பறிக்க கூடாது என்றும் அதேசமயம் நம்நிறுவனத்துக்கும் எந்த அவப்பெயரும் வந்து விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.